திருமுகம் கொடுத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் திருமுகம் கொடுத்த படலம் நாற்பத்தி இரண்டாவது படலமாகும்.

சொக்கநாதர் முன்பு மற்றும் வரகுண பாண்டியனின் அவையிலும் பாடிக் கொண்டிருந்த பாணபத்திரர் சொக்கநாதரின் திருவருளால் தற்பெருமை மிக்க ஏகநாதனை புறமுதுகிட்டு ஓடச் செய்தார். பின்பு சொக்கநாதர் முன்பு மட்டுமே யாழிசைத்து பாடி வந்தார். வேறு ஏதும் வேலை செய்யாததால் பாணபத்திரர் வருமானம் இன்றி உணவுக்கே மிகவும் வருந்தினார். சொக்கநாதர் பாணபத்திரரின் மீது இரக்கம் கொண்டு வரகுணபாண்டியனின் கருவூலத்திலிருந்து நாள்தோறும் பொற்காசு மணிகள் பொன்னாலான பொருள்கள் உள்ளிட்ட பொருட்களிலிருந்து ஏதேனும் ஒன்றைக் கவர்ந்து வந்து பாணபத்திரர் தன்னை மறந்து பாடிக் கொண்டிருக்கும் போது அவர் முன்பாக வைத்தது விடுவார். பாணபத்திரர் பாடி முடித்து கண் திறந்து பார்க்கும் போது அவர் முன் சில சமயம் பணம் இருக்கும். சில சமயம் பொன் வெள்ளிப் பாத்திரங்கள் ஆபரணங்கள் இருக்கும். பாணபத்திரரும் அதனைப் பெற்று உருக்கி விற்று அதனைக் கொண்டு தன்னுடைய வறுமையைப் போக்கி மற்றவர்களுக்கும் உதவி வந்தார். சொக்கநாதர் பாணபத்திரரின் இறைபக்தியை உலகுக்கு எடுத்துக்காட்ட திருவுள்ளம் கொண்டார். எனவே சொக்கநாதர் பாண்டியனின் கருவூலத்திலிருந்து எடுத்து பாணபத்திரருக்கு பரிசளிப்பதை நிறுத்தி விட்டார். இதனால் பாணபத்திரர் மீண்டும் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தார். ஆனாலும் தினந்தோறும் இறைவனை துதித்து பாடுவதை நிறுத்தவில்லை.

சொக்கநாதர் மதிமலி புரிசை என்னும் தொடக்கத்தை உடைய திருமுகப்பாசுரம் ஒன்றை எழுதிக் பாணபத்திரர் தூங்கும் போது அவரருகில் வைத்துவிட்டு பாணபத்திரா உன்னுடைய வறுமையை நீக்குவதற்காக வரகுணனின் கருவூலத்திலிருந்து பொருட்களைக் கவர்ந்து உமக்குப் பரிசளித்தோம். களவு போனதை பாண்டியன் கண்டறிந்தால் இதனை காவல் காத்துக் கொண்டிருந்த காவலர்களுக்கு தண்டனை கிடைக்கும். ஆதலால் சேரமானுக்கு ஓலை ஒன்றினைத் தருகின்றோம். அவன் நம்மிடம் அன்பு பூண்டவன். நீ அதனை அவனிடம் அளித்து வேண்டும் பொருள் பெற்றுக் கொள் என்று திருவாய் மலர்ந்தருளினார். தூக்கத்தில் இருந்து எழுந்த பாணபத்திரர் தன் கையில் இறைவன் கொடுத்த பாடல் எழுதியிருந்த திருமுகத்தைப் (திருமுகம் என்பது பட்டுத் துணியில் எழுதிய கடிதம் ஆகும்) பார்த்து ஆடிப்பாடி மகிழ்ந்தார். தான் பெற்ற பாசுரத்தை எடுத்துக் கொண்டு இறைவனை வணங்கி மலை நாட்டினை நோக்கிப் பயணித்தார். அங்கே திருவிஞ்சைக்களம் என்ற திருத்தலத்தில் தண்ணீர்ப் பந்தலில் தங்கினார்.

சொக்கநாதர் சேர மன்னான பெருமான் நாயனாரின் கனவில் தோன்றி மன்னனே நம் அடியவன் பாணபத்திரன் உன்னைக் கண்டு பாடி பரிசு பெறும் நோக்கில் நம்முடைய திருமுகம் பெற்று மலைநாட்டினை அடைந்துள்ளான். அவனுக்கு வேண்டும் பொருள் கொடுத்தனுப்புக என்று திருவாய் மலர்ந்தருளினார். இதனைக் கேட்டு கண்விழித்த சேரமன்னர் தன்னுடைய வீரர்களை நாலாபுறமும் பாணபத்திரரைத் தேடி அழைத்து வருமாறு அனுப்பினார். சிவனடியார்கள் யார் நாட்டிற்குள் புதிதாக வந்திருந்தாலும் எங்கு பார்த்தாலும் உடனடியாக அவர்களை அழைத்து வரக் கட்டளையிட்டான்.  ஒரு தண்ணீர் பந்தலருகில் வறுமைக் கோலத்தில் மெய் மறந்து பாடிக் கொண்டு நின்று கொண்டிருந்த பாணபத்திரனைப் பற்றி சேவகர் அரசரிடம் சொல்ல சேர மன்னன் விரைந்து பாணபத்திரன் இருக்குமிடம் வந்தான். 

சொக்கநாதரை கண்மூடி இசைத்து பாடிக் கொண்டிருந்த பாணபத்திரரிடம் சேர மன்னன் அடியவரே எங்கிருந்து வருகின்றீர்கள்? என கேட்டார். பாணபத்திரர் தன பாட்டை நிறுத்தி கண்விழித்துப் பார்த்தார். நான் மதுரையிலிருந்து வருகின்றேன். சிவபெருமான் கட்டளையின் பேரில் உங்களைக் காண வந்திருக்கின்றேன். இதைப் பாருங்கள் என்று கூறியபடி தன்னிடம் இறைவன் தனக்கு கொடுத்த திருமுகத்தை பாணபத்திரர் சேரமானிடம் கொடுத்தார். சேரமான் அதனை வாங்கிப் படித்தான். கனவில் சொக்கநாதர் காண்பித்த அதே பாடல் இருந்தது. சேரன் ஆனந்த பரவசனானான். திருமுகத்தை கண்களில் ஒற்றி தலைமேல் வைத்துக் கூத்தாடினார். பின்னர் பாணபத்திரரை யானையின் மீது அமரச் செய்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். அரண்மனையில் பலவித உபச்சாரங்கள் செய்து கருவூலத்தைத் திறந்து காட்டி எம் பெருமானுடைய தொண்டனே இப்பொருள்கள் யாவற்றையும் நீங்கள் எடுத்துச் செல்லலாம் என்று கூறினார். உடனே பாணபாத்திரர் சேரனை வணங்கி நீங்கள் கொடுப்பதைக் கொடுங்கள் போதும் என்று கூறினான். உடனே சேரமான் பொருளை வாரிவாரி வழங்கினார். பாணபத்திரர் அவற்றை ஏற்க மறுத்து தனக்கு வேண்டியவற்றை மட்டும் எடுத்துக் கொண்டார். சேரனை வணங்கி தன்நாட்டினை அடைந்து சொக்கநாதரை வணங்கினார். தான் கொண்டு வந்த பொருட்களை வறியவர்களுக்கும் நலிந்தவர்களுக்கும் கொடுத்து தன் சுற்றத்தாரோடு இனிது வாழ்திருந்தார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தூய்மையான அன்பும் பக்தியும் கொண்ட பக்தர்களின் மகிமைகளையும் பெருமைகளையும் இறைவன் உலகிற்கு எடுத்துக் காட்டுவார் என்பதையும் இந்த உலக வாழ்க்கைக்கு தேவையானதை அவர்களுக்கு இறைவனே கொடுத்து அருள்வார் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

 

Thirumugam Kodutha Padalam (திருமுகம் கொடுத்த படலம்)

"Thirumugam Kodutha Padalam" is the 42nd chapter in the Thiruvilaiyadal Puranam.

 

This chapter translates to "The Chapter where the Divine Letter was Given." It is a profoundly beautiful story that highlights Lord Shiva’s role not just as a deity, but as a caring patron who personally writes a letter of recommendation to help a devotee in financial distress.

 

The Story

1. The Devoted but Impoverished Musician

Panapathirar was a profoundly gifted and devoted musician who sang at the Madurai Meenakshi Sundareswarar Temple every day. His devotion was absolute, but his earthly life was filled with extreme poverty. He struggled to feed his family and his fellow devotees, yet he never once asked the Pandyan King or anyone else for wealth, relying solely on Lord Shiva.

 

2. The Divine Plan

Lord Somasundarar (Shiva) decided it was time to eradicate Panapathirar's poverty. However, instead of simply making gold appear, the Lord decided to facilitate a meeting between two of His greatest devotees: the poor musician Panapathirar and the wealthy Chera King, Seraman Perumal Nayanar, who ruled from Thiruvanchikulam (in modern-day Kerala) and was renowned for his boundless generosity toward Shiva devotees.

 

3. The Lord Becomes a Poet

To introduce His musician to the King, Lord Shiva Himself took up a stylus and a palm leaf. He composed a flawless Tamil poem—a divine epistle (Thirumugam).

 

This famous poem begins with the words "Mathimali Purisai..." (மதிமலி புரிசை). In the letter, Lord Shiva addresses the Chera King, praising his devotion, and writes: "The bearer of this letter, Panapathirar, is a musician who sings my praises just like you do. He is in need of wealth. Please shower him with riches so he can live comfortably."

 

4. The Journey to the Chera Kingdom

Lord Shiva appeared in Panapathirar's dream, handed him the palm-leaf manuscript, and instructed him to take it to the Chera King. Waking up to find the physical letter in his hands, the musician was overwhelmed with emotion. He immediately set off on the long journey across the Western Ghats to the Chera Kingdom.

 

5. The Ecstasy of Seraman Perumal

When Panapathirar arrived at the royal palace in Thiruvanchikulam, he handed the palm leaf to the King, stating it was a letter from Lord Somasundarar of Madurai.

 

When King Seraman Perumal read the letter and realized that the Supreme Lord of the Universe had personally written a letter addressing him, he was pushed into a state of divine ecstasy. He placed the sacred palm leaf on his head, wept tears of joy, and danced around the royal court, completely forgetting his royal dignity.

 

6. The Humble Refusal

Following the Lord's command to the absolute extreme, the Chera King brought out his royal crown, his treasury keys, and all his wealth, placing them at Panapathirar's feet. He offered his entire kingdom to the poor musician.

 

However, Panapathirar was a true devotee of immense humility. He politely declined the kingdom and the crown. He accepted only the exact amount of wealth he needed to relieve his family's poverty and to support other devotees. Taking leave of the great King, Panapathirar returned to Madurai to continue his musical service to Lord Somasundarar.

 

Significance and Legacy

  • The 11th Thirumurai: The poem "Mathimali Purisai" actually exists and is highly celebrated in Tamil literature. It is included in the 11th volume of the Thirumurai (the sacred compendium of Tamil Shaivite poetry) and is officially credited to Alavai Iraiyanar (Lord Shiva of Madurai Himself).

  • The Network of Devotees: The story beautifully illustrates how the Divine operates through a community. Lord Shiva could have just given gold directly, but He chose to give the Chera King the spiritual merit of helping a fellow devotee, creating a bond between them.

  • Detachment from Power: Panapathirar’s refusal to accept the Chera throne demonstrates the ultimate detachment of a true saint. Despite living in crushing poverty, he had no greed for political power; he only wanted enough to survive and continue singing for God.

Reader Comments

No comments yet. Be the first to share your thoughts!