சங்கப்பலகை கொடுத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் சங்கப்பலகை கொடுத்த படலம் ஐம்பத்தி ஒன்றாவது படலமாகும்.

வங்கிசேகர பாண்டியன் மதுரையை நல்லாட்சி செய்த போது பிரும்மதேவன் தன் மனைவியரான காயத்ரி சாவித்திரி சரஸ்வதியுடன் காசிக்கு யாகம் செய்ய வந்தார். லிங்கப் பிரதிஷ்டை செய்தார். அந்த லிங்கம் பிதாமகேஸ்வர லிங்கம் என பெயர் பெற்றது. குளமொன்றை அங்கு வெட்டினார். அக்குளத்திற்கு தசாச்வமேத தீர்த்தம் என்று பெயர் ஏற்பட்டது. அங்கு ஒன்பது அசுவமேத யாகம் செய்து முடித்தார். ஒவ்வொரு யாக முடிவிலும் மூன்று தேவியருடன் நீராடினார். பத்தாவது யாக முடிவில் நீராட செல்லும் போது விஞ்ஞை மாது என்ற கந்தர்வ கன்னி ஒருத்தி யாழினை மீட்டி பாடிக் கொண்டிருந்தாள். அப்பாடலால் ஈர்க்கப்பட்ட சரஸ்வதி அங்கே நின்று விட்டாள். இதனால் பிரம்ம தேவர் மற்ற இருவருடன் கங்கையில் நீராடி வெளியேறினார். அங்கே வந்த சரஸ்வதி பிரம்ம தேவரிடம் என்னை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் நீராட வந்தது ஏன்? என்று கேட்டாள். அதனைக் கேட்ட பிரம்ம தேவர் நீ உன்னிலை மறந்து இசையில் மூழ்கிவிட்டாய். தவறு உன் மீது இருக்க நீ எங்களைக் கோபிப்பது முறையல்ல. குற்றம் புரிந்த நீ மானிடப் பிறவி எடுத்து அக்குற்றத்தைப் போக்கிக் கொள் என்று கூறினார். இதனைக் கேட்டதும் அதிர்ந்த சரஸ்வதி உங்களின் உயிரான நான் அழியும் மானிடப் பிறவி எடுக்க வேண்டுமா? என்று கேட்டாள். அப்போது பிரம்மதேவர் உனது வடிவமாகிய நாற்பத்து எட்டு எழுத்துக்களும் நாற்பத்து எட்டு புலவர்களாக அவதரிப்பார்கள். அவர்களுக்கு தலைமைப் புலவராய் சொக்கநாதர் தோன்றி அவர்களுக்கு அறிவைத் தோற்றுவித்து அவர்களின் புலமையைக் காப்பார். அவர்கள் ஏட்டுச் சுவடிகளாக பாடல்கள் எழுதிக் குவிக்கையில் உன் சாபம் நீங்கி என் நாவில் உறைவாய் என சாப விமோசனமளித்தார்.

பிரம்மதேவரின் கூற்றுப்படி நாற்பத்து எட்டு எழுத்துக்களும் நாற்பத்து எட்டு புலவர்களாக அவதாரம் செய்தனர். சிவத்தொண்டில் சிறந்து விளங்கிய அவர்கள் பல நாடுகளுக்கும் சென்று புலமையில் வென்று மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது சொக்கநாதர் தானும் புலவர் வடிவில் அவர்களின் எதிரே வந்து அவர்களை மதுரைக்கு அழைத்து வந்து திருக்கோயிலை அடைந்து மறைந்தருளினார். அப்புலவர்கள் புலவராக வந்தது சொக்கநாதரே என்பதை உணர்ந்து பல பாடல்களைப் பாடி அவரை வழிபட்டனர். பின்னர் வங்கிசேகர பாண்டியனைக் கண்டு வாழ்த்துக் கூறினர். பாண்டியனும் அவர்களுக்கு பல பரிசுகள் கொடுத்து திருக்கோயிலுக்கு வடமேற்கு திசையில் சங்க மண்டபம் அமைத்து அதில் அவர்களை இருத்தி வைத்தான். ஆதலால் அவர்கள் சங்கப் புலவர்கள் என்று அழைக்கப்பட்டனர். சங்க மண்டபத்தில் வீற்றிருந்த சங்கப் புலவர்கள் வடநாட்டுப் புலவர்களையும் பாண்டிய நாட்டின் முதன்மைப் புலவர்களையும் வாதாடி வென்றனர். இதைக் கண்டு பல திறமையற்ற புலவர்கள் பொறாமை கொண்டவர். இதனை அறிந்த புலவர்கள் ஆலயம் சென்று இறைவனிடம் உண்மைப் புலவர்களை கண்டு பிடிக்கவும் அவர்களின் சிறப்பை வெளிப்படுத்தவும் புலவர்களின் புலமையை உள்ளபடி சீர்தூக்கி அறிய அளக்கும் கருவியாக ஒரு சங்கப் பலகையைத் தந்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தனர்.

சொக்கநாதர் புலவர் வடிவம் தாங்கி ஒரு பலகையுடன் வந்தார் வந்தார். புலவர்களைப் பார்த்து புலவர்களே இப்பலகை பார்ப்பதற்கு குறுகியது ஆனால் மந்திரத் தன்மை உடையது. ஒரு புலவர் தனது பாடலுடன் இந்தப் பலகையில் அமரலாம். பாடல் சரியாக இருந்தால் மட்டும் இது அவர்களுக்கு இடம் கொடுக்கும். அடுத்த புலவர் சரியான பாடலுடன் வந்தால் இப்பலகை சிறிது நீண்டு அவருக்கு இடம் கொடுக்கும். நீங்கள் அனைவரும் சரியான பாடலுடன் வந்தால் நாற்பத்து எட்டு பேருக்கும் வளர்ந்து இடம் கொடுக்கும். நீங்கள் மற்றவருடன் வாதத்தில் ஈடுபடும் போது உங்கள் பாடல் சரியானது தானா என்பதை அறிந்து கொள்ள இது ஒரு தராசு போல் உதவும் என்று கூறி மறைந்தருளினார். அப்பலகையை வித்யாபீடம் சரஸ்வதிபீடம் ஞானபீடம் மாத்ருகாபீடம் வியாக்யான பீடம் எனப் பலபெயர்கள் சூட்டி மகிழ்ந்தனர். சங்கப்பலகை என அதற்குப் பெயர் ஏற்பட்டது. சங்கப் புலவர்கள் அப்பலகையை திருக்கோயிலில் வைத்து வழிபட்டனர். ஒரு முழத்திற்கும் குறைவான அப்பலகையில் முதலில் நக்கீரர் சரியான பாடலுடன் அமர்ந்தார். உடனே இன்னொருவர் அமரும் அளவு பலகை நீண்டது. பின்பு கபிலர் அமர மறுபடியும் நீண்டது. இவ்வாறு புலவர்கள் அமர அமர பலகை விரிவடைந்தது. போலிப் புலவர் அமர்ந்தால் பலகை நீளாமல் அப்படியே இருந்தது. அவர் எழுந்தால் மட்டுமே நீண்டது. நாற்பத்து எட்டு புலவர்களும் சரியான பாடலைக் கொண்டு சங்கப் பலகையில் ஏறி வீற்றிருந்தனர். அதன்மேல் அமர்ந்த புலவர்கள் எழுதிப் போட்ட ஏடுகளால் சங்கமண்டபம் நிரம்பி வழிந்தது. யாருடையது எங்கே இருக்கிறது என்று பகுத்து எடுக்க முடியாத அளவு கலந்து கிடந்தது. தங்களுடையது எது என்பதை அறிந்து கொள்ள முடியாமல் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

சொக்கநாதர் அவர்களின் முன்னால் புலவர் வடிவத்தில் தோன்றி அவர்களின் பாடல்களை ஆராய்ந்து பொருளினை கூறி அவரவர் பாடல்களை அவரவர்களுக்கு பிரித்துக் கொடுத்தார். புலவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புலவர்களின் நடுவில் நடுநாயகமாக அமர்ந்து பாடல் ஒன்றை இயற்றினார் இறைவன். புலவர்களில் நக்கீரர் மட்டும் அதில் குற்றம் சொன்னார். சொல்லழகும் பொருளழகும் பண்ணழகும் மிக்கப் பாக்களை இயற்றினார் இறைவன். அதற்கும் குற்றம் சொன்னார் நக்கீரன். அப்போது ஆகாயத்தில் அசீரீரியாக புலவர்களுக்குள் இருக்கும் குழப்பத்தை தீர்க்கப் புலவர் வடிவில் வந்திருப்பது சொக்கநாதர். தானே பெரியவன் என்னும் அகந்தையில் வாது செய்யாதே நக்கீரா எனக் குரல் கேட்டது. நக்கீரர் தனது அகந்தையை நீக்கி வணங்கினார். மற்ற புலவர்களும் எம்பெருமானை வணங்க அனைவருக்கும் ஆசிகூறி மறைந்தார் சொக்கநாதர்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

சங்கப் புலவர்களுக்கு தமிழ் பாடல்களின் தரத்தினை அளவீடு செய்வதற்காக சங்கப் பலகை ஒன்றைத் தந்து அருளியதையும் இறைவனார் எங்கும் நடுநிலைமை வகிப்பார் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

Sangappalakai Kodutha Padalam (சங்கப்பலகை கொடுத்த படலம்)

"Sangappalakai Kodutha Padalam" is the 51st chapter in the Thiruvilaiyadal Puranam.

 

This chapter translates to "The Chapter where the Sangam Plank was Given." It is a foundational story in Tamil literary history, as it describes the divine establishment of the legendary Madurai Tamil Sangam (the ancient academy of poets) and introduces the ultimate, magical test for literary perfection.

 

The Story

1. The Earthly Incarnation of the Poets

According to the Puranam, Lord Brahma once cursed 48 celestial beings (Vidyadharas/Sages) for their pride, decreeing that they be born on Earth as mortals. Born across the Tamil-speaking lands, these 48 individuals grew up to be brilliant poets, possessing unmatched mastery over the Tamil language. Among them were the legendary trio: Nakkeerar, Kapilar, and Paranar.

 

2. The Gathering in Madurai

Wandering from shrine to shrine and kingdom to kingdom, the 48 poets eventually converged in the great city of Madurai, ruled by the Pandyan King. They recognized that Madurai, with its rich heritage and the divine presence of Lord Somasundarar (Shiva), was the perfect place to establish a formal academy of Tamil literature—a Sangam.

 

3. The Need for a Standard

While the poets were brilliant, they needed a way to distinguish true, flawless poetry from mediocre work. They needed an absolute, unbiased standard of measurement that would prevent false or untalented poets from claiming a seat at the academy and polluting the purity of the Tamil language.

 

4. The Gift of the Divine Plank

The 48 poets went to the Meenakshi Sundareswarar Temple and prayed to Lord Shiva for a solution. Answering their prayers, Lord Shiva appeared before them in the guise of a fellow poet. He handed them a small, beautifully crafted, diamond-studded wooden board—the Sangappalakai (Sangam Plank).

 

Lord Shiva instructed them to place the plank on the waters of the Potramarai Kulam (Golden Lotus Tank) inside the temple.

 

5. The Magic of the Sangappalakai

The divine plank possessed miraculous properties. Physically, it was only about one cubit (a span) wide—seemingly only large enough for a single person. However:

 

  • If a truly worthy, flawless poet stepped onto it, the plank would magically expand to give them a comfortable seat.

  • If a poet with flawed verses or immense arrogance tried to sit on it, the plank would shrink, tilt, and unceremoniously dump them into the tank's holy waters.

6. The Seating of the 48

One by one, the 48 poets stepped onto the floating Sangappalakai. Proving their supreme merit, the tiny plank miraculously expanded each time. Finally, it grew large enough to comfortably seat all 48 poets together, floating majestically on the golden waters. Lord Shiva Himself, taking the form of the 49th poet, sat at the center of the board, officially inaugurating the Third Madurai Tamil Sangam.

 

Significance and Legacy

  • The Ultimate Peer Review: The Sangappalakai is the mythological precursor to modern literary criticism. It symbolizes that true art is judged not by royal decree or personal wealth, but by an incorruptible standard of merit.

  • A Tamil Idiom: Even today in Tamil Nadu, the term Sangappalakai is used as a metaphor. If a book, movie, or piece of art is subjected to intense critical scrutiny to prove its worth, it is said to be "put on the Sangappalakai."

  • Setting the Stage: This chapter establishes the pride and unshakeable authority of these 48 poets, perfectly setting the stage for the subsequent chapters—where this very same pride leads Nakkeerar to challenge Lord Shiva over Tharumi's poem, and later causes the massive dispute (Kalagam) among the poets themselves.

Reader Comments

No comments yet. Be the first to share your thoughts!